சொல் பொருள்
காமா – அழகில் மன்மதனே!
சோமா – கொடையில் சோமனே!
சொல் பொருள் விளக்கம்
“காமா சோமா என்று நடத்திவிட்டான்” என்பது வழக்கு. பிறரைப் புகழ்ந்து அவர்கள் துணையால் எளிமையாக நிறைவேற்றிவிட்டதைக் ‘காமா சோமா’ என்று நடத்தி விட்டான் என்பர். புகழ்ச்சியைக் கருவியாக்கி நிறைவேற்று தலைக் குறித்தது இது. அழகுக்கு ‘மன்மதன்’ முதல்வன் எனப்படுவான். இடைக்காலத்தில் வாழ்ந்த ஒரு வள்ளல் பெயர் ‘சோமன்’ என்பது “புல்லரிடத்தே சோமன் கொடை அருமை அறிக” என்பது ஒரு தனிப்பாடல் செய்தி.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்