சொல் பொருள்
காய்தல் – பட்டுணியாதல். பசித்துக் கிடத்தல்
சொல் பொருள் விளக்கம்
வெயில் காய்தல்; குளிர்காய்தல்; காயப் போடுதல் என்பவை எல்லாம் வெதுப்புதல் பொருளன. இக் காய்தல், கதிரோன், தீ, மின்சாரம் ஆகியவற்றால் ஏற்படுபவை. இவற்றை விடுத்துப் பசியும் தீயாகவும்; எரியாகவும், வழங்கப்படும். பசியைத் ‘தீப்பிணி என்பதும் வழக்கே. தீ எரிப்பதுபோல் பசித்தீயும் எரிக்கக் கூடியது தானே’ ‘உன்னைக் காயப்போட்டால்தான் சீராகும்’ என்பதில் காயப்போடல் பட்டுணி போடலைக் குறித்தல் அறிக. “காய்ந்த மாடு, கம்பில் விழுந்தாற்போல்” என்னும் பழமொழியும் காய்தல் பசித்தலைச் சுட்டும். காயப்போடல் பொருளை ‘ஒட்டக்காயப் போடல்’ என்பது நன்கு தெளிவிக்கும் ‘ஒட்டுதல் குடலுள் ஒன்றும் இன்றி ஒட்டிப்போதல், ‘ஒட்டகம்’ ஒட்டிப்போன அகத்தையுடையது பட்டுணி பன்னாள் கிடக்க வல்லது என்னும் பொருளதாம் அது.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்