காரான் என்பது கரிய பசு, காளை, அல்லது எருமை
1. சொல் பொருள்
(பெ) கரிய பசு, காளை அல்லது எருமை.
2. சொல் பொருள் விளக்கம்
கரிய எருமை அல்லது பசு,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
black buffallo or black cow
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
நள்ளென் யாமத்து ஐயென கரையும் – குறு 261/3,4
சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
நள்ளென்கிற நடுச் சாமத்தில் ‘ஐ’யென்று கத்தும்
மன்ற எருமை மலர் தலை காரான்/இன் தீம் பால் பயம் கொள்-மார் கன்று விட்டு – நற் 80/1,2
மலர் தலை காரான் அகற்றிய தண்ணடை – நற் 391/4
இரு மருப்பு எருமை ஈன்றணி காரான்/உழவன் யாத்த குழவியின் அகலாது – குறு 181/3,4
சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்/ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்