சொல் பொருள்
காற்றாடல் – வணிகம் நடவாமை
சொல் பொருள் விளக்கம்
உலாவப் போதல் ‘காற்றாடல்’ எனப்படும். வேலையொன்றும் இன்றி வெளியே உலாவுதலே வேலையாகப் போதலே அக்காற்றாடலாம். காற்று வாங்கப் போதல் என்பதும் அது. ஓய்வு பெற்ற முதியவர் காலார நடப்பதே அக்காற்றாடலாகும். ஆனால், சிலர் கடையில் பொழுதெல்லாம் போனாலும் வணிகம் ஒன்றும் நடவாது. பொருள்கள் கடையில் இருந்தும் வாங்குவார் இல்லாமல் வராமல் – காத்துக்கொண்டிருப்பதே கடைக்காரர் பணியாக இருக்கும். அக்கடையைக் காற்றாடுவதாகக் கூறுவது வழக்கு. ‘கடை காற்றாடுகிறது’ என்பர். கடை ஓடாது என்பதற்கு முன்னிலை காற்றாடலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்