சொல் பொருள்
காற்றுப்பிரிதல் – அடைப்பு அகலல்
சொல் பொருள் விளக்கம்
மேலால் காற்றுப் பிரிதலும், கீழால் காற்றுப் பிரிதலும் உடலியற்கை. உடலுள் மிகுந்த தீய காற்று வெளிப்பட இயற்கை வழங்கியுள்ள வாயில்கள் இவை. இவை வெளிப்படாமை பலப்பல துயர்க்கு இடனாம். இவை பிரிதலைக் காற்றுப் பிரிதல் என்றும், காற்றுப்பரிதல் என்றும் கூறுவர். காற்றுப் பிரிந்தால், அடைப்பு விலகியது என்னும் குறிப்பாம். காற்று மூச்சுக்காற்றைக் குறியாமல் வெளிப்படுத்தவேண்டிய தீக்காற்றைக் குறித்தலால்
வழக்கு வழிப்பட்டதாயிற்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்