சொல் பொருள்
காலைக்கட்டுதல் – கவலைப்படுதல்
சொல் பொருள் விளக்கம்
காலைக் கட்டுதல். அயலார் கட்டுதல் அன்று. தானே தன் காலைக் கட்டுதல் ஆகும்? கப்பல் கவிழ்ந்தாலும் காலைக் கட்டலாமா? கன்னத்தில் கை வைக்கலாமா? என்பவை பழமொழிகள். கவலைப்பட்டோர் குத்துக் காலிட்டு உட்கார்ந்து கால்முட்டிகளுக்கு ஊடே தலையை வைத்துக் கைகளால் காலைக்கட்டிக்கொண்டு இருத்தலே காலைக் கட்டுதல் எனப்படுகிறது. கவலைக்குரிய தன்மை வெளிப்பாடு காலைக் கட்டுதல் ஆகும். தாயைப் பிரியமாட்டாத சேய் தாயின் காலைக்கட்டுதல் கவலையோடு கூடிய அன்பு வெளிப்பாடாம். அக்கால் தன் கால் அன்றாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்