சொல் பொருள்
குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது பணம் என்னும் பொருளில் வழங்குகின்றது
சொல் பொருள் விளக்கம்
கால் என்பது சக்கரம், வட்டம், உருள் முதலிய பொருள் தரும் சொல். சகடக்கால் என்பது வண்டிச் சக்கரம். சக்கர – வட்ட – வடிவில் ஆக்கப்பட்ட இனிப்பு சக்கரை. பணம் அல்லது காசு வட்டவடிவில் செய்யப்பட்டதால் அதைச் சக்கரம், வட்டம், உருள் என்றும் வட்டார வழக்காகக் கூறுவர். குமரி மாவட்ட வழக்கில் கால் என்பது பணம் என்னும் பொருளில் வழங்குகின்றது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்