சொல் பொருள்
வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு
சொல் பொருள் விளக்கம்
வெற்றிலையை மென்று துப்பும் கலத்தைக் காளாஞ்சி என்பது பழவழக்கு. ‘காளாஞ்சி ஏந்துவார்’ என்பது ஒரு பணிவிடையர். காளாஞ்சி என்பதற்குத் ‘தளுகை’ என்பது நெல்லை மாவட்ட வழக்கு. காளம் என்பது கருமை, காகம் என்னும் பொருளது. காகளம் என்பதும் அது. காக்கைக்கு முதற்கண் தெய்வப் படையலாக உணவைப் படைத்து வழங்கும் வழக்கத்தால் தளுகைப் பொருள் ஏற்பட்டிருக்கும் கோயில் திருப்பொருள் தளுகை ஆகும். தளி = கோயில்; தளிகை (தளுகை) கோயில் உணவு. கல் தளி, மண் தளி; கோயில் கட்டடம் கல்லால் ஆயதும், மண்ணால் ஆயதும் பற்றியது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்