சொல் பொருள்
நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது
சொல் பொருள் விளக்கம்
காவுதடி = காவடி; காவுகின்ற (தாங்குகின்ற) அடி யுடைய தாதலால் காவு அடி எனினும் ஆம். இக்காவடி என்பது உழவர் வழக்கில் நுகக்கோல் (நுகத்தடி, மேற்கால்) என்பதைக் குறிக்கின்றது. காவடி தாங்குவது போல் சமமான அளவில் ஊடு ஆணி ஒன்று மையமாக அமையத் தாங்கும் கோல் நுகக்கோல் என்பது எண்ணத் தக்கது. “நுகத்தில் பகல் (நடு) ஆணி அன்னான் தஞ்சைவாணன்” என்பது தஞ்சைவாணன் கோவை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்