சொல் பொருள்
கிச்சு என்பது தீ என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது
கிச்சுக் காட்டி மூச்சுத் திணறச் செய்தல் கிச்சு முச்சு ஆகும்
சொல் பொருள் விளக்கம்
கிச்சு என்பது தீ என்னும் பொருளில் மதுரை வட்டார வழக்காக உள்ளது. கிச்சுக் காட்டுதல், கிச்சங்காட்டுதல் என்பவை நகைப்பூட்டல். தீயை உராய்ந்து பற்ற வைத்து ஒளியூட்டச் செய்தலால் கிச்சு என வந்திருக்கலாம். ‘கிச்சு முச்சு’ என்பது இணைச்சொல். கிச்சுக் காட்டி மூச்சுத் திணறச் செய்தல் கிச்சு முச்சு ஆகும். கிச்சு முச்சு இல்லாமல் விளையாடுங்கள் என்பது பெரியவர்கள் விளையாடும் சிறுவர்க்கு இடும் கட்டளை.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்