Skip to content

சொல் பொருள்

(பெ) 1. நிலப்பரப்பு,

2. ஒரு பொருள் அமைந்திருக்கும் நிலை

3. படுத்திருக்கும் நிலை,

சொல் பொருள் விளக்கம்

நிலப்பரப்பு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

 long stretch of land

being in a certain state

 recumbent posture

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

திரை பிறழிய இரும் பௌவத்து
கரை சூழ்ந்த அகன் கிடக்கை – பொரு 178,179

திரை முரிந்த கரிய கடலின்
கரைகள் சூழ்ந்த அகன்ற நிலப்பரப்பில்,

முருகு அமர் பூ முரண் கிடக்கை – பட் 37

மணம்பொருந்திய பூக்கள் நிறத்தால் தம்முள் மாறுபட்டுக் கிடக்கும் நிலை

மறி இடைப்படுத்த மான் பிணை போல
புதல்வன் நடுவணன் ஆக நன்றும்
இனிது மன்ற அவர் கிடக்கை – ஐங் 401/1-3

குட்டியினை நடுவில்போட்டுப் படுத்த ஆண்மானும், பெண்மானும் போல
தம் மகன் நடுவில் இருக்க, மிகவும்
இனிமையானது, உண்மையாகவே, அவர்கள் படுத்திருப்பது

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *