Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால ஊர்,

சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககால ஊர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

a city in sangam period.

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கிடங்கில் என்பது சங்ககாலத்து ஊர்களில் ஒன்று ஆகும். இப்போதுள்ள திண்டிவனம் என்னும் ஊரின் ஒரு பகுதிதான்
கிடங்கில் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். சிறுபாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவனான ஓய்மான் நாட்டு
நல்லியக் கோடன் ‘கிடங்கில் கோமான்’ என்று சிறப்பிக்கப்பட்டுள்ளான். இந்த அரசனின் தலைநகர் மாவிலங்கை.
கிடங்கில் அரசர்கள் சிறந்த உழவர்களுக்குக் ‘காவிதி’ என்னும் விருது வழங்கிப் பாராட்டினர். அப்படிப் பாராட்டப்பட்ட இருவர் புலவர்களாகவும் விளங்கியுள்ளனர். கிடங்கில் காவிதிக் கீரங்கண்ணனார், கிடங்கில் காவிதிப்
பெருங்கொற்றனார் ஆகியோர் காவிதி விருது பெற்ற புலவர்கள். குறுந்தொகை 252ஆம் பாடலைப் பாடிய புலவர்
குலபதி நக்கண்ணனார் இந்தக் கிடங்கில் ஊரில் வாழ்ந்தவர்.

கிளை மலர் படப்பை கிடங்கில் கோமான்
தளை அவிழ் தெரியல் தகையோர் பாடி – சிறு 160,161

கிளைகளில் பூக்களையுடைய தோட்டங்களையுடைய கிடங்கில் (என்னும் ஊர்க்கு)அரசனாகிய
அரும்பு அவிழ்ந்த மாலையையுடைய அழகுடையோனைப் பாடி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *