சொல் பொருள்
(பெ) ஆழமான பள்ளம், அகழி,
சொல் பொருள் விளக்கம்
ஆழமான பள்ளம், அகழி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
trench, moat, ditch
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: எழுது எழில் சிதைய அழுத கண்ணே தேர் வண் சோழர் குடந்தை_வாயில் மாரி அம் கிடங்கின் ஈரிய மலர்ந்த பெயல் உறு நீலம் போன்றன – நற் 379/6-9 மை தீட்டிய கண்களின் அழகு குலைந்துபோகுமாறு அழுத கண்கள், தேர்களை இரவலர்க்கு வழங்கும் சோழரின் குடவாயில் என்னும் ஊரில் உள்ள மழைபெய்து நிரம்பிய அகழியில் குளிர்ச்சியாக மலர்ந்த மழைநீரை ஏற்ற நீலமலரைப் போல ஆயின;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்