சொல் பொருள்
(பெ) இறகு போல் இலையைக் கொண்ட நீர்த்தாவரம், நெட்டி
ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும்
நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும்
சொல் பொருள் விளக்கம்
நிலத்தில் கிடக்கச் செய்வது கிடையாகும். நிலத்தில் உரத்திற்காக ஆடுகளைக் கிடைபோடுதல் உழவர்கள் – ஆடு மாடு மேய்ப்பவர்கள் வழக்கமாகும். ஆட்டுக்கிடை போலவே மாட்டுக்கிடையும் உண்டு. கிடக்க வைப்பது என்பது கிடையாய், ஆடுமாடுகளின் மந்தையைக் குறிப்பது வட்டார வழக்காகும். இது தென்னக வழக்கு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pith plant
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அறு கய மருங்கின் சிறு கோல் வெண் கிடை – புறம் 75/8 வற்றிய குளத்தில் சிறிய தண்டாகிய வெண்மையான நெட்டியின் கிடை என்று சொல்லப்படும் நெட்டி என்ற இந்தத் தாவரம் சடை , சடைச்சி , கிடைச்சி , கிடேச்சு, கோத்திரம் என்றெல்லாம் அறியப்படும் ; வயலுக்கு உரமாக அமைவது ; கால் நடைகளுக்கு உகந்ததல்ல; இது களையாகக் கருதப்படுகிறது ; இதன் கரி, வெடிமருந்து தயாரிக்கப் பயன்படுகிறது; இதன் தட்டை மீன்பிடி வலைகளுக்கு மிதவைகளாகப் பயன்படுத்தப்படுகிறது ;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்