சொல் பொருள்
(பெ) ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும்,
சொல் பொருள் விளக்கம்
ஒரு வகைப் பறை, தடாரி எனப்படும், பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a drum
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாணர்குடியில் பெண்களும் இதனை வாசிப்பர். அவர் கிணைமகள் எனப்படுவார். வளை கை கிணை மகள் – சிறு 136 போர் மறவர்கள் இதனை இசைத்து மகிழ்வர். வெம் போர் மள்ளர் தெண் கிணை கறங்க – பதி 90/44 முருகனை வணங்குவோர் இதனை இசைத்து வணங்குவர். கேட்டுதும் பாணி எழுதும் கிணை முருகன் தாள் தொழு தண் பரங்குன்று – பரி 8/81,82 உறுதியான தோல் வாரினால் இது இறுகக் கட்டப்பட்டிருக்கும். கோலினால் முழக்கப்படும். வள் வார் விசி பிணித்து யாத்த அரி கோல் தெண் கிணை – அகம் 249/2,3 பாணர் ஊர்விட்டு ஊர் போகும்போது நடை வருத்தம் தீர மரத்தடியில் இதனை இசைத்து மகிழ்வர் சுரம் முதல் வருத்தம் மரம் முதல் வீட்டி பாடு இன் தெண் கிணை கறங்க – அகம் 301/9,10 மன்னர் படையெடுத்துச் செல்லும்போது இதனை இசைத்துச் செல்வது வழக்கம். தந்தை தம்மூர் ஆங்கண் தெண் கிணை கறங்க சென்று ஆண்டு அட்டனனே – புறம் 78/11,12
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்