சொல் பொருள்
(பெ) கால் கொலுசு,
சொல் பொருள் விளக்கம்
இந்தக் கிண்கிணியில் தவளை வாயைப் போன்ற அமைப்பினையுடைய உருண்டைகள்
கோக்கப்பட்டிருக்கும். இவை காசு எனப்படும். இந்தக் காசுகளுக்குள் முத்து, மணி போன்ற
பரல்கள் போடப்பட்டிருப்பதால் நடக்கும்போது இவை ஒலி எழுப்பும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
tinkling ornament for the ankle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கிண்கிணி காலில் அணிவது. கிண்கிணி கவைஇய ஒண் செம் சீறடி – திரு 13 கிண்கிணியின் குமிழ்களுக்குள் பரல்களிருக்கும், அவை நடக்கும்போது இனிமையான ஒலி எழுப்பும் அரி பெய் கிண்கிணி ஆர்ப்ப – நற் 250/2 அரி என்பது சலங்கைகளுக்குள் இடப்படும் முத்து, மணி போன்ற பரல்கள். கிண்கிணி சிறுவர்கள் அணிவது. குரும்பை மணி பூண் பெரும் செம் கிண்கிணி பால் ஆர் துவர் வாய் பைம் பூண் புதல்வன் – நற் 269/1,2 கிண்கிணிச் சலங்கைகள் சற்றே திறந்த வாயை உடையன. அது தவளையின் வாய் போல் இருக்கும். தவளை வாஅய பொலம் செய் கிண்கிணி காசின் அன்ன போது ஈன் கொன்றை – குறு 148/2,3 கிண்கிணியைப் பெண்களும் அணிவதுண்டு. கிண்கிணி மணி தாரோடு ஒலித்து ஆர்ப்ப ஒண் தொடி பேர் அமர் கண்ணார்க்கும் – கலி 74/13,14 கிண்கிணியைப் பொன்னாலும் செய்வார்கள். பொலன் செய் கிண்கிணி நலம் பெறு சேவடி – அகம் 254/3 கிண்கிணியின் சலங்கைகளைப் பொடிவைத்து ஊதி ஒட்டுவார்கள். பொடி அழல் புறந்தந்த செய்வுறு கிண்கிணி – கலி 85/2 சிறுவர்கள் பெரியவர்களானதும் கிண்கிணியைக் களைந்து கழல் பூணுவார்கள் கிண்கிணி களைந்த கால் ஒண் கழல் தொட்டு – புறம் 77/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்