சொல் பொருள்
கிண்டிக்கிழங்கெடுத்தல் – மற்றவை வெளிப்படுத்தல், கடுந்துன்புக்காளாக்கல்
சொல் பொருள் விளக்கம்
கிழங்கு நிலத்துள் புதையுண்டிருப்பது. அதனை எடுக்க அகழ்தல் வேண்டும். அறுகங் கிழங்கு மிக ஆழத்தில் – எட்டடி பத்தடி ஆழத்திற்கு மேலும் இருப்பது. அதனைத் தோண்டியெடுத்தல் அரும்பாடாம். இவற்றில் இருந்து கிண்டிக்கிழங்கெடுத்தல் வழக்கு உண்டாயது. கிண்டல் என்பது இருக்குமிடம் காண்டல்; தடவித் தெரிதல். பின்னர் அதன் வழியே அகழ்ந்து கிழங்கெடுத்தல். அதுபோல ஒரு மறைவுச் செய்தியைத் தெரிவதற்குத் துப்புத் துலக்குதலும் அதன் தடம்பற்றி ஆய்தலும் உண்மை கண்டுபிடிக்கும் வழிகளாம் “காவல் நிலையம் போனான், கிண்டிக்கிழங்கு எடுத்துவிட்டனர்.” என்பதில் கமுக்க வெளிப்பாடும் வெளிப்படுத்திய வகையும் வெளிப்படுவனவாம்
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்