சொல் பொருள்
கிய்யா – குருவிக் குஞ்சின் ஒலி
மிய்யா – பூனைக் குட்டியின் ஒலி
சொல் பொருள் விளக்கம்
“அவன் பேச்சா பேசுகிறான்? கிய்யா மிய்யா என்கிறான்” எனப் பழிப்புக் காட்டுவதுண்டு.
ஒன்றை ஒருவனிடம் கேட்க அதற்கு விளக்கமானதெளிவான-விடை கூற முடியாமல் மருண்டு பேசுவதைக் கிய்யா மிய்யா என்கிறான் என்பர். குருவிக் குஞ்சும், பூனைக் குட்டியும் எவற்றையோ கண்டு அஞ்சி ஒலிப்பது போல, இவனும் அஞ்சி உளறுகிறான் என்றும்; அவன் மருளுதல் தெரிவதை அன்றிப் பொருள் புலப்பாடு இல்லை என்றும் தெரிவிப்பதாம் இது.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்