சொல் பொருள்
(பெ) கிலுகிலுப்பை,
சொல் பொருள் விளக்கம்
கிலுகிலுப்பை, உமணர் வண்டிகளோடு செல்லும் குரங்கு, உமணர் தம்முடன் கொண்டுசெல்லும்
முத்து உள்ள கிளிஞ்சல்களைக் கிலுகிலுப்பையாக ஆட்டி, உமணர் குழந்தைகளோடு
விளையாடுமாம்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
children’s rattle
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நோன் பகட்டு உமணர் ஒழுகையொடு வந்த மகாஅர் அன்ன மந்தி மடவோர் நகாஅர் அன்ன நளி நீர் முத்தம் வாள் வாய் எருந்தின் வயிற்று அகத்து அடக்கி தோள் புறம் மறைக்கும் நல்கூர் நுசுப்பின் உளர் இயல் ஐம்பால் உமட்டியர் ஈன்ற கிளர் பூண் புதல்வரொடு கிலுகிலி ஆடும் – சிறு 55-61 வலிமையுள்ள எருதுகளையுடைய உப்பு வாணிகரின் வண்டி ஒழுங்கோடு வந்ததும், (அவர்களின்)பிள்ளைகளைப் போன்றதும் ஆன மந்தி, மடப்பத்தையுடைய மகளிர் சிரிப்பு(ப் பல்) போன்ற செறிந்த நீர்மையுடைய முத்தினை, வாளின் வாய் போலும் வாயையுடைய கிளிஞ்சிலின் வயிற்றுக்குள் இட்டுப்பொதிந்து, தளர்ந்த இடையினையுடைய, தோளையும் முதுகையும் மறைக்கின்ற அசைகின்ற இயல்புடைய ஐந்து பகுதியாகிய கூந்தலினையுடைய உப்பு வாணிகத்தியர் பெற்ற, விளங்குகின்ற அணிகலன்களையுடைய, பிள்ளைகளுடன் கிலுகிலுப்பையாக்கி விளையாடும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்