சொல் பொருள்
(பெ) 1. சொல், 2. பேச்சு, கூற்று,
சொல் பொருள் விளக்கம்
சொல்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
word, speech,
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நாம் உறு துயரம் செய்யலர் என்னும் காமுறு தோழி காதலம் கிளவி இரும்பு செய் கொல்லன் வெம் உலை தெளித்த தோய் மடல் சில் நீர் போல நோய் மலி நெஞ்சிற்கு ஏமம் ஆம் சிறிதே – நற் 133/7-11 நாம் படும் துன்பத்தை நம் தலைவர் செய்யமாட்டார் என்னும் என்பால் விருப்பமிக்க தோழியே! உன் அன்புமிக்க இச் சொல்லானது இரும்புவேலை செய்கின்ற கொல்லனின் வெப்பமான உலையில் தெளித்த பனைமடலில் தோய்த்த சிறிதளவு நீரைப் போல நோய்மிக்க என் நெஞ்சினை ஆற்றுவதாய் இருக்கிறது ஓரளவுக்கு. அம் தீம் கிளவி தான் தர எம் வயின் வந்தன்று மாதோ காரே – ஐங் 490/1,2 அழகும் இனிமையுமுள்ள பேச்சினையுடயவளை எம்மிடத்தில் தருவதற்கு வந்துவிட்டது கார்காலம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்