சொல் பொருள்
(பெ) ஒரு சோழ மன்னன்,
சொல் பொருள் விளக்கம்
நலங்கிள்ளி, நெடுங்கிள்ளி ஆகிய சோழ மன்னரைப் பற்றிப் பாடிய புலவர்களே குளமுற்றத்துத் துஞ்சிய
கிள்ளிவளவனைப் பற்றியும் பாடியிருப்பதால், கிள்ளிவளவனும் இவர்கள் காலத்திலேயே வாழ்ந்தவனாவான்.
இங்குக் குறிப்பிடப்படும் கிள்ளிவளவன் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a chozha king
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒள் எரி புரையும் உரு கெழு பசும் பூண் கிள்ளிவளவன் படர்குவை ஆயின் – புறம் 69/15,16 ஒள்ளிய எரியை ஒக்கும் நிறம் பொருந்திய பசும்பொன்னால் செய்யப்பட்ட பூணினையுமுடைய கிள்ளிவளவனிடத்தே செல்குவையாயின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்