சொல் பொருள்
கிழித்தல் – வைதல், மாட்டாமை.
சொல் பொருள் விளக்கம்
கிழித்தல் துணி. தாள், தோல் முதலியவற்றைக் கிழித்தலை விடுத்து வசைப் பொருளில் வருவது இக்கிழித்தலாம். ‘கிழி கிழி’ என்று கிழித்துவிட்டார் என்றால் சொல்ல மாட்டாத, வாயில் வராத சொற்களையெல்லாம் சொல்லி வைதார் என்பது பொருள். மறைத்து வைத்திருந்த செய்திகளையெல்லாம் வெளிப்படுத்த வசை கூறலால் முகத்திரையைக் கிழித்தல் போல வழக்கில் வந்ததாகலாம். கிழித்தல் என்பது செய்யமாட்டாமைப் பொருளிலும் வழங்குகின்றது “நீ செய்து கிழிப்பது எனக்குத் தெரியாது?”
என்பதில் செய்யமாட்டாய் என்பது கருத்தாகும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்