சொல் பொருள்
குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது
சொல் பொருள் விளக்கம்
கு என்பது குறுமைப் பொருள் முன்னொட்டு. எ-டு: குக்கிராமம் குக்கல் முடங்கிக் கிடக்கும் நாய்க்கும், கோழிக்கு வரும் ஒடுக்க நோய்க்கும் பெயர். குச்சரி என்பது நொய்யரிசி, நொறுங்கு அரிசி என்னும் பொருளில் தக்கலை வட்டார வழக்காக உள்ளது. குச்சு அரி, குச்சரி. குச்சு = சிறியது; அரி = அரிசி. குச்சு வீடு என்பது காண்பது. ‘குச்சுக்காரி’ என்பதும் கேட்பது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்