சொல் பொருள்
குடல் – சிறு குடல்-பெருங்குடல் முதலியவை.
குந்தாணி – குடலின் மேல் மூடி (உதரவிதானம்)
சொல் பொருள் விளக்கம்
“குத்திய குத்தில் குடலும் குந்தாணியும் தள்ளிவிட்டன” என்பது வழக்கு.
குடல் என்பதற்குக் குழல் போல்வது என்பது பொருள். உட்டுளையுடையவை குடல், குழல், புடல், புழல் முதலியவை என்க. குந்தாணி என்பது உரல்மேல் வளையமாக இருக்கும் வளை தகடு என்பதை அறிவது. மேல்மூடி என்னும் பொருளுக்கு உதவும்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்