சொல் பொருள்
குடியர் – மதுக்குடியர்
சொல் பொருள் விளக்கம்
குடிப்பது எல்லாம் குடியே எனினும், ‘குடி’ என்பது மதுக்குடியையே குறிப்பது வழக்காயிற்று. குடித்தல் என்னும் பொதுமையை விலக்கி மது என்னும் சிறப்பைக் குறிப்பதாகக் ‘குடி’ என்பது வழக்கத்தில் உள்ளதாம். “குடிகாரன் பேச்சு விடிந்தாலே போச்சு” என்னும் பழமொழியில் வரும் குடிகாரன் குடியனாதல் அறிக. குடியிருப்பவன் என்னும் பொருளை விலக்கிக் குடிப்பவன் என்னும் பொருளில் வருதல் அறிக.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்