சொல் பொருள்
குடுமிப்பிடி – கெடுபிடி
சொல் பொருள் விளக்கம்
“என்னைக் குடுமிப் பிடியாகப் பிடித்து விட்டான் என்ன செய்வேன்? வில்லாததை விற்றாவது கொடுத்துத்தானே ஆக வேண்டும்?” என்பது கடன் நெருக்கடிப்பட்டார் சொல்லும் வழக்கு. குடுமியைப் பிடித்து விட்டால் தப்புதல் அரிது. ‘சிக்கம்’என்பது குடுமி. சிக்கெனப் பிடித்தல் என்பதும் அது. குடுமியில் ‘சிக்கு’ உண்டாகும். அதனை விலக்குவது பக்குவமாகச் செய்தாலேயே துன்பின்றி இயலும். இல்லாக்கால் வலியும் உண்டாம்; அழிவும் உண்டாம். ஆதலால் குடுமிப்பிடி நெருக்கடி செய்து‘வைத்துவிட்டுப்போ’ என்ற நிலையில் அமைவதாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்