சொல் பொருள்
குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது.
சொல் பொருள் விளக்கம்
சண்டை, பெண்களிடம் உண்டாகிவிட்டால் இயல்பாகப் பற்றிக் கொண்டு அலைக்கழிக்க வாய்ப்பது கூந்தல் ஆகும். கூந்தல் பெண்களுக்குரியது. ஆண்கள் குடுமிக்குரியர் குடுமி பொதுமை குறித்து வருவதுடன் மதில் முதலியவற்றின் உச்சியும் குடுமியாகக் கூறப்படும். குடுமி கொண்ட மண்ணு மங்கலம் என்பது ஒரு புறத்துறை. குடுமி பற்றிச் செய்யும் சண்டை குடுமை எனப்பட்டு, பொதுவில் ‘சண்டை’ என்னும் பொருளில் கருவூர் வட்டார வழக்கில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்