சொல் பொருள்
மலையாள நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது
சொல் பொருள் விளக்கம்
குடை என்பது கைக்குடை, தாழங்குடை, ஓலைக் குடை எனப் பழமை தொட்டுப் புதுமை வாய்ந்தது. பதனீர் குடிக்கும் மடலும், ஊன் கொண்டு செல்லும் மடலும் குடையெனலும் பழமை வழக்கே. மலையைக் குடையாகப் பிடித்த தொன்ம (புராண)ச் செய்தியும் உண்டு. மலையில் குடைந்து படுக்கை (பள்ளி) அமைத்த குடைவரைகள் தமிழகத்தில் காணக்கூடியது. இக்குடை, உள்ளே தோண்டுதல் பொருளது. மலையாள நாட்டில் குடை என்பது குன்று, மலை என்னும் பொருளில் உள்ளது.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்