சொல் பொருள்
குட்டை – நெட்டைக்கு மாறானது குட்டை
கட்டை – குட்டையானதும் பருத்ததும் கட்டை.
சொல் பொருள் விளக்கம்
‘குட்டைப்பிள்ளை கட்டைப் பிள்ளை’ என்பதில் முன்னது குள்ளமானது என்றும், பின்னது குள்ளமானதும் கனமானதும் என்றும் பொருளாம். குளம் குட்டை என்பதில் வரும் குட்டையையும், கைக்குட்டையையும் கருதுக. கட்டைவிரல், பெருவிரல் என்பதை எண்ணுக. நெடுமரத்தைக் குறுகக் குறுக வெட்டியது ‘கட்டை’ எனப்படுவதையும் – கொள்க’
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்