சொல் பொருள்
குண்டக்காக – இடுப்புப் பகுதியாக.
மண்டக்காக – தலைப் பகுதியாக.
சொல் பொருள் விளக்கம்
சிறுவர்கள், ‘கால்மாடு தலைமாடு’ தெரியாமல் (கால்பக்கம் தலைப்பக்கம் பாராமல்) படுத்திருப்பதைக் காணும் பெரியவர்கள் இப்படியா குண்டக்காமண்டக்காவாகப்படுப்பது? என இடித்துக் கூறுவது வழக்கம். பொருத்தமில்லாமல் கிடக்கும் பொருள்களைக் குண்டக்கா மண்டக்காக் கிடப்பதெனக் கூறுவதும் வழக்கமேயாகும். காலும் தலையும் மாறிக் கிடத்தல் போல் பொருள்கள் சிதறிக் கிடத்தலைக் குறிப்பதாம்.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்