சொல் பொருள்
குண்டு – ஆழ்ந்த நீர்நிலை
குழி – பள்ளம்
சொல் பொருள் விளக்கம்
குண்டு மிக ஆழத்தைக் குறித்துப் பழநாளில் வழங்கியது. ‘குண்டுகண் அகழி’ என்பது புறநானூறு. பின்னே குண்டு, குளத்தையும், வயலையும் குறிப்பதாயிற்று. சாலையில் பெரும் பள்ளமாக இருப்பதைக் குண்டு என்பதும், சிறு பள்ளமாக இருப்பதைக் குழி என்பதும் உண்டு. மேட்டு நிலங்களைக் குண்டும் குழியுமாக்கி வயல்நிலப் படுத்துதல் வழக்கமாதலின் குண்டு குழி என்பவை வயலுக்கு ஆயிற்றாம். குண்டு குழி பார்த்து வண்டியை ஓட்டு” என்பது வழக்கு.
குறிப்பு:
இது ஒரு இணைச்சொல்.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்