Skip to content

சொல் பொருள்

(பெ) ஒரு சங்ககால ஊர்

சொல் பொருள் விளக்கம்

ஒரு சங்ககால ஊர்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

the name of a place in sangam period

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

தொன்று முதிர் வேளிர் குன்றூர் அன்ன – நற் 280/8

பழமை முதிர்ந்த வேளிருடைய குன்றூரைப் போன்ற
– வேளிரது குன்றூர் மேலைக்கடற்கரைக்கண் கொண்கான நாட்டில் உள்ளதோர் ஊர். இப்போது
அதனைக் குன்னூர் என்று வழங்குகின்றனர் – ஔ.சு.து. உரை விளக்கம்

தொன்று முதிர் வேளிர் குன்றூர் குணாது

தண் பெரும் பவ்வம் அணங்குக தோழி – குறு 164/3,4
பழமை முதிர்ந்த வேளிர்குலத்தின் குன்றூருக்கும் கிழக்கிலிருக்கும்
குளிர்ந்த பெரிய கடல் என்னை வருத்துவதாக! தோழி!

நற்றிணையில் இதே போல் குறிப்பிடப்படும் ’

தொன்று முதிர் வேளிர் குன்றூர்

மேலைக்கடற்கரை ஊர்
என்பார் ஔ.சு.து.அவர்கள். ஆனால் அதேபோல் குறிப்படப்படும் குறுந்தொகைக் குன்றூரின் கிழக்கில்
கடல் உள்ளது என்பதால் இது ஆய்வுக்குரியது.

குன்றூர் கிழார் மகனார் என்ற சங்ககாலப் புலவர் பாடிய இரு பாடல்கள் (நற்றிணை 332, புறநானூறு 338)
நமக்குக் கிடைக்கின்றன. இவற்றில் நற்றிணைப் பாடல் ஆசிரியர் குன்றூர்க் கிழார் மகனார் கண்ணத்தனார்
என்று அழைக்கப்படுகிறார். இப்பாடலுக்கான முன்னுரையில், ‘குன்றூர் எனப் பெயரிய ஊர்கள் தமிழகத்தில்
பல உண்மையின், இஃது இன்ன நாட்டதென வரையறுத்தற்கு இயலவில்லை’ என்பார் ஔவை.சு.து.அவர்கள்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *