சொல் பொருள்
குப்பை கொட்டல் – சங்கடத்தோடு அல்லது சலிப்போடு வாழ்தல்
சொல் பொருள் விளக்கம்
“உன்னோடு இவ்வளவு காலமாகக் குப்பை கொட்டி என்ன கண்டேன்”. என்று சலித்துப் பேசுவது கேட்கப்படும் செய்தி.குப்பை கொட்டல் என்பது உரம்போடல், பயிர் ஊட்டமாக வளர்தற்கு வேண்டியது குப்பை. அக்குப்பை கொட்டாக்கால் பயிர் வளமாக வளராது; வாய்த்த பயன்தராது. அப்படியே, நான் இக்குடும்பத்துக்கு உரமாகவும் ஊட்டமாகவும் இருந்து பாடுபட்டேன். அதற்குப் பயன் என்ன? உன் வசையும் திட்டும் அடியும் தடியும் அல்லாமல் கண்டதென்ன? என்னும் உவர்ப்பின் வழி வந்த வழக்குச் சொல் குப்பை கொட்டலாம்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்