சொல் பொருள்
கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும்
சொல் பொருள் விளக்கம்
கும்மிருட்டு என்பது நள்ளிருட்டு ஆகும். அது விடியுங்கால் சற்றே இருட் செறிவு நீங்கும் நிலையைக் குமரி இருட்டு என்பது சீர்காழி வட்டார மீனவர் வழக்காகும். கடலுள் சென்றவர் மீண்டு விட்டதும், கடலில் செல்வார் புகாததும் ஆகிய கருக்கல் அல்லது வைகறைப் பொழுதின் இருட்டே குமரி இருட்டு. கன்னிமதில், மதில் குமரி என்பவை பகைவரால் தீண்டப்படாத மதில் என்பதைக் கருதுக.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்