சொல் பொருள்
(பெ) 1. அரிவாள், 2. இளமை, 3. குயவர்,
சொல் பொருள் விளக்கம்
அரிவாள்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sickle, juvenility, youth, potter
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கூனி குயத்தின் வாய் நெல் அரிந்து – பொரு 242 குனிந்துநின்று, அரிவாளின் வாயால் நெல்லை அறுத்துச், குயம் மண்டு ஆகம் செம் சாந்து நீவி – அகம் 48/11 இளமை தங்கும் மார்பினில் சிவந்த சந்தனத்தைப் பூசி, கண் மடல் கொண்ட தீம் தேன் இரிய கள் அரிக்கும் குயம் – புறம் 348/2,3 கணுவில் தோன்றும் மடலில் கட்டப்பட்டிருந்த இனிய தேன் கூட்டினின்றும் தேனீக்கள் பறந்தோட தேனடையிலுள்ள தேனை வடித்துக்கொள்ளும் குயவர்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்