Skip to content

சொல் பொருள்

(பெ) குடிசை, சிறுகுடில்,

சொல் பொருள் விளக்கம்

குடிசை, சிறுகுடில்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

small hut

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

அப்பு நுனை ஏய்ப்ப அரும்பிய இருப்பை – அகம் 9/3

நான்கு கழிகளை நட்டு, நாற்புறம் சுவர் அல்லது தடுப்பு எழுப்பி, மேற்கூரையைக் கொண்ட ஓர் அமைப்பு.

பெரிய வெயிலை இது தாங்காது.

உறு வெயிற்கு உலைஇய உருப்பு அவிர் குரம்பை – சிறு 174,175

மிகுகின்ற வெயிலுக்கு (உள் உறைவோர்)வருந்திய வெப்பம் விளங்குகின்ற குடில்

ஈச்ச மரத்தின் இலை, வேறு இலைதழைகள், அரிந்த தட்டைகள், நாணற்புல், முள்
ஆகியவை கூரையாக வேயப்பெற்றிருக்கும்.

ஈத்து இலை வேய்ந்த எய் புற குரம்பை – பெரும் 88

இலை வேய் குரம்பை உழை அதள் பள்ளி – மது 310

அகல் இலை கவித்த புதல் போல் குரம்பை – அகம் 315/16

இருவி வேய்ந்த குறும் கால் குரம்பை – குறி 153

புல் வேய் குரம்பை நல்லோள் ஊரே – குறு 235/5

முண்டகம் வேய்ந்த குறி இறை குரம்பை – நற் 207/2

மிகவும் குறுகலாக இறங்கும் கூரையினை உடையது.

குறி இறை குரம்பை பறி உடை முன்றில் – பெரும் 265

இறை என்பது கூரையின் இறக்கம்.

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *