சொல் பொருள்
(பெ) வாழை,தென்னை, பனை போன்றவற்றின் விரியாத இளம் இலை
சொல் பொருள் விளக்கம்
வாழை,தென்னை, பனை போன்றவற்றின் விரியாத இளம் இலை
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Sprout; white unfurled tender leaves of a tree like plantain, coconut, palmyrah
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோடையில் குருத்து இறுபு உக்க வருத்தம் சொலாது தூம்பு உடை துய் தலை கூம்புபு திரங்கிய வேனில் வெளிற்று பனை போல – அகம் 333/8-11 மேல்காற்றால் குருத்து இற்று உதிர்ந்த வருத்தம் நீங்காது துளையையுடைய துய்யை உடைய உச்சி கூம்பி வற்றிய வேனிற்காலத்து இளம் பனை போல பனை தலை கருக்கு உடை நெடு மடல் குருத்தொடு மாய கடு வளி தொகுத்த நெடு வெண் குப்பை – குறு 372/1,2 பனைமரத்தின் உச்சியிலுள்ள கருக்கினையுடைய நெடிய மடல்கள் குருத்தோடு மறைந்துபோக கடும் காற்று தொகுத்துவைத்த நீண்ட வெள்ளை மணற்குவியல்கள்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்