Skip to content

சொல் பொருள்

1. (வி) 1. (நாய்) குலை, 2. ஆரவாரி,

2 (பெ) ஆரவாரம்,

சொல் பொருள் விளக்கம்

(நாய்) குலை,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

bark, as a dog, Noise, roar, shout, shout, roar, clamour

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில் – சிறு 132

ஈன்றணிமையையுடைய நாய் குலைக்கும் புன்மையுடைய அடுக்களையில்

நுரை தலை குரை புனல் வரைப்பு_அகம் புகு-தொறும் – பொரு 240

நுரையைத் தலையில் உடைய ஆரவாரிக்கும் நீர் குளத்திலும் கோட்டகத்திலும் புகுதொறும்

குரை இலை போகிய விரவு மணல் பந்தர் – நற் 40/2

ஒலிக்கும் தென்னங்கீற்று வேய்ந்து, பரப்பிய மணலைக் கொண்ட பந்தலில்,

குரை தொடி மழுகிய உலக்கை வயின்-தோறு – பதி 24/19

ஒலிக்கின்ற பூண் மழுங்கிப்போன உலக்கை இருக்கும் இடங்கள்தோறும்

குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20

திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *