சொல் பொருள்
நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது ஏக்கர் என வழங்கப்பட்டது
சொல் பொருள் விளக்கம்
நீண்டும் அகன்றும் கிடக்கும் நிலப்பரப்பை அளந்து நீளத்திலும் அகலத்திலும் குறுகத் தறித்து வைக்கப்பட்ட ஓரளவான நிலப்பகுதி குறுக்கம் எனப்படும். அது ஏக்கர் என வழங்கப்பட்டது. 100 செண்டு ஓர் ஏக்கர் என்பது நில அளவைக் கணக்கு. இடுப்பைக் குறுக்கு என்பதை எண்ணினால் தெளிவாம். குறுக்கும் மறுக்கும் என்பது இணைமொழி. சிலுவையைக் (+) குறுக்கை என்றார் பாவாணர்.
குறிப்பு:
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்