சொல் பொருள்
1. (வி) இடி,
2. (வி.எ) கொய்து, பறித்து,
3. (பெ) குற்றுதல், இடித்தல்
4. (பெ.அ) குறிய, குறுகிய,
சொல் பொருள் விளக்கம்
இடி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
pound, having plucked, pounding, be short
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தொடி மாண் உலக்கை பரூஉ குற்று அரிசி – புறம் 399/2 பூணிட்டு மட்சியுறுவித்த பருத்த உலக்கையால் குற்றப்பட்ட அரிசி சுனை பூ குற்று தொடலை தைஇ – குறு 142/1 சுனையில்மலர்ந்த மலர்களைப் பறித்து, மாலையைக் கட்டி – குற்று – பறித்து – உ.வே.சா உரை, விளக்கம் (குறு – பறி) குற்று ஆனா உலக்கையால் – புறம் 22/18 குற்றுதல் அமையாத உலக்கையொலியுடனே குறு நறு முஞ்ஞை கொழும் கண் குற்று அடகு – புறம் 197/11 குறிய, நாற்றத்தையுடைய முஞ்ஞையது கொழுவிய கண்ணில் கிளைக்கப்பட்ட குறிய இலையையுடைய – ஔ.சு.து.உரை முஞ்ஞையில் சிறிதாகத் தளிர்த்த மணமுள்ள கீரையை – ச.வே.சு.உரை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்