சொல் பொருள்
(வி) சிதை,
2. (பெ) 1. வாழை, தென்னை போன்றவற்றின் காய்களின் கொத்து, பூக்களின் கொத்து,
2. வில்லின் நாண்
சொல் பொருள் விளக்கம்
(வி) சிதை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
shatter, wreck
cluster, bunch of fruits, flowers.
bowstring
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சுடர் விரிந்து அன்ன சுரி நெற்றி காரி விடரி அம் கண்ணி பொதுவனை சாடி குடர் சொரிய குத்தி குலைப்பதன் தோற்றம் காண் – கலி 101/21-23 சூரியனின் கதிர்கள் விரிவதைப் போன்ற சுழியினை நெற்றியில் கொண்ட கரிய காளை, மலைப்பிளவிலே பூத்த பூவைக் கொண்ட தலைமாலை அணிந்த இடையனைத் துவட்டிக் குடல் சரியும்படி குத்தி, அவன் உடலைச் சிதைக்கின்ற காட்சியைப் பார்! அ.காய்க் கொத்துக்கள் இளநீர் விழு குலை உதிர தாக்கி – திரு 308 குலை முதிர் வாழை கூனி வெண் பழம் – பெரும் 359 கற்றை ஈந்தின் முற்று குலை அன்ன – நற் 174/1 முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின் கொழு மடல் அவிழ்ந்த குழூஉ கொள் பெரும் குலை – நெடு 23,24 குருகு பறியா நீள் இரும் பனை மிசை பல பதினாயிரம் குலை தரை உதிர்வ போல் – பரி 2/43,44 ஆ. பூங்கொத்துக்கள் செழும் குலை காந்தள் கை விரல் பூப்பவும் – சிறு 167 காஞ்சி மணி குலை கள் கமழ் நெய்தல் – குறி 84 கடத்து இடை பிடவின் தொடை குலை சேக்கும் – பதி 66/17 கூன் முள் முள்ளி குவி குலை கழன்ற – அகம் 26/1 பொகுட்டு அரை இருப்பை குவி குலை கழன்ற – அகம் 95/6 அலங்கு குலை அலரி தீண்டி தாது உக – அகம் 178/10 குலை இழிபு அறியா சாபத்து வயவர் – பதி 24/12 நாணைக் கழற்றி அறியாத வில்லைக்கொண்ட வீரர்கள், வில் குலை அறுத்து கோலின் வாரா வெல் போர் வேந்தர் முரசு கண் போழ்ந்து – பதி 79/11,12 வில்லின் நாணை அறுத்து அவரை வீழ்த்தி, தனது செங்கோலுக்கு அடங்கிவராத வெல்லும் போரினைக் கொண்ட வேந்தர்களின் முரசுகளின் முகப்பைக் கிழித்து,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்