சொல் பொருள்
(வி.எ- அளபெடை) குலவி என்பதன் விகாரம், வளைந்து, வளைத்து,
சொல் பொருள் விளக்கம்
குலவி என்பதன் விகாரம், வளைந்து, வளைத்து,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
bending
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திருவில் குலைஇ திரு மணி புரையும் உரு கெழு கருவிய பெரு மழை சேர்ந்து வேங்கை விரிந்து விசும்பு உறு சேண் சிமை அருவி அரு வரை அன்ன மார்பின் – பதி 88/32-35 வானவில்லை வளைத்து, அழகிய நீல மணி போன்ற, அச்சந்தரும் இடிமின்னலோடு கூட்டமாய்ச் சேர்ந்த பெரிய மேகங்கள் ஒன்றுசேர, வேங்கைப்பூக்கள் மலர்ந்திருக்க, விண்ணைத்தொடும் தொலைவிலுள்ள சிகரத்திலிருந்து விழும் அருவியையுடைய அரிய மலையைப் போன்ற மார்பினையுடையவனாய் வில் குலைஇ, வேங்கை விரிந்து என்னும் வினையெச்சங்களைத் திரித்து, வில் குலவ, வேங்கை விரிய என மாறிக் கூட்டி — ஔ.சு.து.விளக்கம் மலை மிசை குலைஇய உரு கெழு திருவில் – அகம் 84/1 மலை மீது வளைந்த அச்சந்தரும் அழகிய வில்லையுடைய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்