குல்லை என்பது நாய்த்துளசி
1. சொல் பொருள்
(பெ) 1. நாய்த்துளசி, 2. கஞ்சங்குல்லை, கஞ்சாங்கோரை, ஒரு பூச்செடி, கஞ்சாச்செடி, பூங்கஞ்சா, திருநீற்றுப் பச்சை, சப்ஜா விதை, கற்பூரத்துளசி, பச்சிலை, திருநீற்றுப்பச்சிலை, உருத்திரச்சடை, விபூதிபச்சிலை, பச்சபத்திரி, திருநீத்துப்பத்திரி
2. சொல் பொருள் விளக்கம்
- குல்லை, வெண்ணிற மலர்.
- கோடையில் பூக்கும்.
- கூந்தலில் சூடும் பூ, கண்ணியாகக் கட்டித் தலையில் சூடிக்கொள்வர். மாலையில் சேர்த்துக் கட்டுவர்.
- திருநீறு தயாரிப்பில் இதன் சாம்பல் சேர்க்கப்படும்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
wild basil, White-Basil, Ocimum album, Ocimum canum, Ocimum basilicum
marijuana, Indian hemp, Cannabis sativa?
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குல்லை குளவி கூதளம் குவளை – நற் 376/5 துளசி, காட்டு மல்லிகை, கூதாளி, குவளை குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும் – பொரு 234 கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும், முடித்த குல்லை இலை உடை நறும் பூ - திரு 201 குல்லை அம் புறவில் குவி முகை அவிழ்ந்த - சிறு 29 குல்லை பிடவம் சிறுமாரோடம் - குறி 78 குல்லை கண்ணி வடுகர் முனையது - குறு 11/5 குல்லை வகுளம் குருக்கத்தி பாதிரி - பரி 12/79 குல்லையும் குருந்தும் கோடலும் பாங்கரும் - கலி 103/3 குல்லையே நின்று ஒவ்வோர் உறுப்பு எல்லை கொண்டன இல்லதேல் வடிவும் - தேம்பா:27 160/2 குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல் - தேவா-சுந்:1006/3 முல்லையும் பிடாவும் குல்லையும் கொன்றையும் - இலாவாண:12/18
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்