சொல் பொருள்
குளிப்பாட்டல் – வயப்படுத்துதல், புகழ்தல்.
சொல் பொருள் விளக்கம்
நீரால் குளிப்பாட்டல் காணக் கூடியது. குழந்தை, முதியர்,நோயர் ஆகியோரைத்தாம் குளிப்பாட்டல் என்பது இல்லாமல் செல்வர்களையும் குளிப்பாட்ட ஆட்கள் உண்டு. இக்குளிப்பாட்டுதல் மகிழ்வளிப்பது! குழந்தைகள் குளிப்பாட்டலை வெறுத்தாலும் தானே குளிக்க விரும்புவது வெளிப்படை. குளிப்பாட்டலிலும் மிகுந்த இன்பம் தருவது புகழ்க் குளிப்பாட்டல். அத்தகையர், இத்தகையவர் என்று வாய் குளிரப்பாராட்டினால் மனங்குளிர்ந்து போகின்றவர்கள் மிகுதி. அம்மிகுதியை அறிந்து கொண்டவர்கள். தங்களுக்கு வேண்டுவதை நிறைவேற்றிக் கொள்வதற்காகப் புகழ்க் குளிப்பாட்டுதலில் கைதேர்ந்த கலை வல்லராக விளங்குகின்றனர். குளிப்பாட்டல், மனம் கிளுகிளுக்கப் பாராட்டுதலாகப் பொருள் படுவதாயிற்று.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்