சொல் பொருள்
(பெ) 1. புல்லாங்குழல், 2. ஒரு வகை மீன், 3. உள்ளீடற்ற சற்று நீண்ட ஒரு பொருள், 4. கூந்தல்,
சொல் பொருள் விளக்கம்
புல்லாங்குழல்
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
flute
glossy blue milk-fish, Chanos salmoneus
tube shaped object
woman’s hair
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஆம்பல் அம் தீம் குழல் தெள் விளி பயிற்ற – குறி 222 ஆம்பல் எனும் பண்ணினையுடைய இனிய குழலில் தெளிந்த இசையைப் பலமுறை எழுப்ப, வறல் குழல் சூட்டின் வயின்_வயின் பெறுகுவிர் – சிறு 163 உலர்ந்த குழல்மீனைச் சுட்டதனோடு இடங்கள்தோறும் பெறுவீர்: துணர் காய் கொன்றை குழல் பழம் ஊழ்த்தன – ஐங் 458/1 கொத்துக்கொத்தான காய்களைக் கொண்ட கொன்றையின் குழல் போன்ற பழங்கள் பழுத்து முதிர்ந்தன வெண் துகில் சூழ்ப்ப குழல் முறுக்குநர் – பரி 10/80 வெண்துகிலைச் சுற்றித் தம் கூந்தலை முறுக்கிப்பிழிந்தனர் சிலர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்