சொல் பொருள்
(பெ) குழு, கூட்டம்,
சொல் பொருள் விளக்கம்
குழு, கூட்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
community, association, guild, group, gathering, flock
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: இரும் கால் வீயும் பெரு மர குழாமும் இடனும் வலனும் நினையினிர் நோக்கி – மலை 265,266 நீண்ட காம்பையுடைய (அப்)பூவினையும், (அப்பழங்களையுடைய)பெரிய மரக்கூட்டங்களையும் இடப்பக்கத்திலும், வலப்பக்கத்திலும் நினைவினிற்கொண்டவராய்ப் பார்த்து எமக்கு இல் என்னார் நின் மறம் கூறு குழாத்தர் – பதி 39/2 எமக்கு இல்லையென்று சொல்லமாட்டார் – உன் வீரத்தை விளக்கிக்கூறும் கூட்டத்தார்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்