சொல் பொருள்
(பெ) கூட்டம்,
சொல் பொருள் விளக்கம்
கூட்டம்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
class, assembly, crowd
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கோதை மகளிர் குழூஉ நிரை கடுப்ப – நற் 238/2 மாலையணிந்த மகளிர் குழுவின் வரிசையை ஒப்ப குன்று தலைமணந்து குழூஉ கடல் உடுத்த – பதி 31/1 குன்றுகள் திரளாக நெருங்கி நிற்க, அலைகள் கூடி முழங்குதலையுடைய கடலை ஆடையாக உடுத்திய – குழூஉதல் – அலைகள் கூடி முழங்குதல் – பல பொருட்களும் திரளுதலையுள்ள கடல் குழூஉக்கடல் எனப்பட்டதென்றும் கூறுவர். – ஔ.சு.து.உரை, விளக்கம். மற புலி குழூஉ குரல் செத்து – பதி 41/7 வீரம்செறிந்த புலியின் தொகுதியான பிடரிமயிர் என்று எண்ணி கடாஅ யானை குழூஉ சமம் ததைய – அகம் 220/4 மதம் பொருந்திய யானையின் கூட்டம் போர்முனையில் அழிய
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்