Skip to content

சொல் பொருள்

(பெ) 1. குவியல், 2. திரட்சி, 3. கூட்டம், திரள்,

சொல் பொருள் விளக்கம்

குவியல்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

heap, roundness, fullness, group, assemblage

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

குன்றத்து அன்ன குவவு மணல் நீந்தி – நற் 207/5

மலை போன்ற குவியலான மணல் மேடுகளைக் கடந்து

அம் தளிர் குவவு மொய்ம்பு அலைப்ப சாந்து அருந்தி – குறி 120

அழகிய தளிர்கள் உருண்டு திரண்ட தோளில் (வீழ்ந்து)அலைக்க, சந்தனத்தை உள்ளடக்கி

குவவு குரை இருக்கை இனிது கண்டிகுமே – பதி 84/20

திரண்ட ஆரவாரத்தையுடைய உன் படைகளின் இருப்பை இனிதே கண்டுமகிழ்ந்தோம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *