சொல் பொருள்
கூட்டிக் கொடுத்தல் – இணைசேர்த்து விடல்
சொல் பொருள் விளக்கம்
களத்தில் பொலிபோடும் போதும், தவசம் அளக்கும் போதும் அள்ளுபவர்க்கு வாய்ப்பாகத் தவசத்தைக் கூட்டிக் கொடுப்பது நடைமுறை. கணவன் மனனவியர் மனத்தாங்கல் கொண்டு பிரிந்துவிட்டால் அவர்கள் வாழ்வில் அக்கறையுடையவர்கள் அவர்களைக் கூட்டிவைத்தல் உண்டு. ஆனால் இக்கூட்டிக் கொடுத்தல் அவற்றில் வேறுபட்டதும் இழிவுடையதுமாம். ஒருவன் பாலுணர்வுக்கு இரையாக ஒருத்தியைத் தம் பயன் கருதிக் கூட்டிக் கொடுத்து இன்பப்படுத்துவது கூட்டிக்கொடுத்தலாகப் பழிக்கப்படும். அத்தொழிலால் பொருள் ஈட்டி அப்பொருளால் பழியை மறைக்கத் தேர்ந்தாரும் உளர்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்