சொல் பொருள்
கூட்டிக் கொண்டு போதல் – உடன்போக்கு.
சொல் பொருள் விளக்கம்
குழந்தைகளைக் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு போதல் வழக்கம். பார்வை இல்லாதவரையும் அப்படிக் கூட்டிப் போதலுண்டு. கண்டறிந்தவர்கள், கண்டறியாதவர்க்கு வழிகாட்டியாக இருந்து சுற்றுலாவாகக் கூட்டிக் கொண்டு போதலும் உண்டு. இவற்றையெல்லாம் கூட்டிக் கொண்டு போதல் என்னும் அளவால் கருதுவது இல்லை. ஒருகாதலன் தன் காதலியைப் பெற்றவரும் மற்றவரும் அறியாவகையில் வேறிடத்திற்கு அழைத்துக் கொண்டு போதலே கூட்டிக்கொண்டு போதலாகச் சொல்லப்படுகிறது. இதனைப் பழங்கால இலக்கண இலக்கியங்கள் ‘உடன் போக்கு’ என்று கூறும்.
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்